உயிர்கள் உருகும் வலியில் எங்கள் உள்ளம் அழுகின்றது
உதிரம் வழியும் நெஞ்சம் உம் முகம் காண துடிக்கின்றது விடிவை தேடி ஒளியாய் மாறிய சூரிய குழந்தைகளே தாய் மண் தவிப்பினை ஓர் கணம் உணர்ந்து மீண்டிங்கு வாருங்களே மின்மினி வானத்தில் கண்கள் இமைக்காமல் உங்கள் முகம் தேடுகின்றோம் துயில் நிலம் எங்கும் பூக்களை தூவி வரவினை பார்க்கின்றோம் கொடி அசைந்தாடும் காற்றினில் உங்களின் மூச்சினை உணர்கின்றோம் மௌனமாய் விழிகளை மூடிய போதினில் அருகினில் வந்ததை காணுகின்றோம் சாவயும் வாழ்வையும் ஒன்றென கருதிய கால முனிவர்கள் ஆனீர்கள் வாழ்கையின் இன்பங்கள் யாவும் துறந்தெங்கள் வாழ்வு மலர்ந்திட போனீர்கள் பூகம்ப வேதியை நெஞ்சினில் ஏந்தியும் பூக்களை போல சிரித்தீர்கள் ஓர் முறை சாவினை தழுவிய போதும் உள்ளங்களில் என்றும் வாழ்வீர்கள் |