மாவீரர் நீங்களே பாடல் & வரிகள்மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே
ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து
குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே
குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே
மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்
மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்
உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்
மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்
பதுங்கு குழியில் இருக்கும் பிள்ளை என்று தாய்மை நினைக்கும்
அது பத்து மாதம் சுமந்த வயிற்றை தடிவி பார்த்து சிலிர்க்கும்
இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்

கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்
அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகை சுடர்கள் விழிக்கும்
கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்
அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகை சுடர்கள் விழிக்கும்
தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்
தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்
இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்பாடல் வரிகளில் தவறுகள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்.