விழி ஊறி நதியாகி பாடல் & வரிகள்விழி ஊறி நதியாகி விழுந்தோடும் எம்மில் அவர் விடுகின்ற உயிர் மூச்சு எழும் எங்கள் மண்ணில்
விழி ஊறி நதியாகி விழுந்தோடும் எம்மில் அவர் விடுகின்ற உயிர் மூச்சு எழும் எங்கள் மண்ணில்
அம்மா அம்மா என்று குரல் கேட்கும் அது கேட்கும் திசை மீது விழி பார்க்கும்
பெற்றவள் அறியாளா பிள்ளையின் குரலை போய் அவள் தொடுவாளே பூக்களின் விரலை

கண்களிலே ஒளி கொண்டு கல்லறை திறக்கும் கார்த்திகை மாதத்திலே கருவறை விழிக்கும்
கண்களிலே ஒளி கொண்டு கல்லறை திறக்கும் கார்த்திகை மாதத்திலே கருவறை விழிக்கும்
அன்னையின் முகம் காணும் ஆவலில் இருக்கும் அங்கு ஒரு புது வெள்ளம் அணையினை உடைக்கும்
"இதில் வரும் பாடல் வரி எனக்கு விளங்கவில்லை"
பின்நேரப் பொழுதாயின் தீப ஒளி வெள்ளம் தாயின் மடி எங்கும் பாயும்

ஒரு கணம் குழிக்குள்ளே உடல்களும் அசையும் உறவுகள் மொழி கேட்டு முகங்களும் மலரும்
ஒரு கணம் குழிக்குள்ளே உடல்களும் அசையும் உறவுகள் மொழி கேட்டு முகங்களும் மலரும்
பெருமையில் மாவீரம் புன்னகை விரிக்கும் போய் அதை காண்போரின் நெஞ்சினை உருக்கும்
நாளை தமிழீழ தேசம் நமதென்று கூறி களமாடினார்கள்
இவர் மூடும் குழிக்குள்ளே தேசப்படம் ஒன்றை கீறி உயிர் வாழ்கிறார்கள்.பாடல் வரிகளில் தவறுகள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்.