கல்லறை மேனியர் கண் திறப்பார்களே - Eelam Songs

கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே
அவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே
மன்னவரை பாடுதற்கு இந்த ஜென்மம் போதவில்லை
கல்லறையில் போடுதற்கு கோடி மலர் பூக்கவில்லை கோடி மலர் பூக்கவில்லை
கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே
அவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே

கோயில் மணி ஓசையிட தேகம் மெல்ல உயிர் பெறும்
ஆறு மணியானவுடன் வாசல் மெல்ல திறந்திடும்
கல்லறை தெய்வங்கள் கண்ணெதிரே வந்து என்னென்னவோ கதைப்பார்கள்
அந்த புன்னிய நேரத்தில் வண்ணங்கள் ஆயிரம் மின்னிடவே சிரிப்பார்கள்
இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்
யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்

காற்றெழுந்து வீசிடவே கண்ணெதிரே வந்தெழுவார்
காத்திருப்போர் காதுகளில் வார்த்தை ஒன்று பேசிடுவார்
தீபங்கள் ஏற்றிடும் தோழர்களை பார்த்து தாகத்துக்கும் பதில் கேட்பார்கள்
வண்ண பூவுடனே வரும் தோழியரை பார்த்து தேசத்துக்கும் வழி கேட்ப்பார்கள்
இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்
யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்