எரியும் நெரும்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமடா
உடல் உருகும் போதும் தலைவன் பெயரை உரத்துப் பாடுவோமடா
பூக்கள் எமது ஜாதி பூங்காற்றும் எமது ஜாதி
பூக்கள் எமது ஜாதி பூங்காற்றும் எமது ஜாதி
தாக்கப்போகும் நாளில் மட்டும் எமக்குப் புதிய நீதி
கண்ணிமை திறந்தால் அதிலோ நெருப்பாறுகள் ஓடுமடா
எங்கள் அண்ணன் வழி எதுவாயினும் கருவேங்கைகள் பாயுமடா
எரியும் நெரும்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமடா
உடல் உருகும் போதும் தலைவன் பெயரை உரத்துப் பாடுவோமடா
எமது தாயின் மடியில் ஏறும் எதிரி மீது அதிர்வோம்
வெடிகளாகும் நொடியில் கூட விரியும் சிரிப்பு சொரிவோம்
எரியும் நாளை அறிவோம் உயிரை வெளியில் எறிவோம்
எரியும் நாளை அறிவோம் உயிரை வெளியில் எறிவோம்
விரைவில் எமது தமிழர் தேசம் விடியும் எனவே விரைவோம்
உலகம் எங்கும் பரவும் காற்றில் எமது உயிரைக் கலப்போம்
உறவு வேரில் புதியதான மலர்களாகப் பிறப்போம்
உயிரும் எமக்குப் பெரியதல்லடா
இது வரிகள் எழுதும் கவிதையல்லடா
எரியும் நெருப்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமடா
உடல் உருகும் போதும் தலைவன் பெயரை உரத்துப் பாடுவோமடா
அழுது அழுது சிவந்த விழியில் நெருப்பு மூட்டு தமிழனே
உறங்கிக் கிடக்கும் உனது பொழுதை உதயமாக்கு தமிழனே
எமது ஊரில் பேய்கள் உலவுதாமே ராவில்
எமது ஊரில் பேய்கள் உலவுதாமே ராவில்
அதிக நாளிற்கிருக்க விடுதல் அழிவுதானே ஊரில்
புலிகளாகி எழுக எழுக எமது தாயைக் காப்போம்
புனிதப்போரில் இணைக இணைக புதிய வாழ்வு சேர்ப்போம்
சஞ்சலிக்கும் மனதை வெல்லடா
இது சாவுக்கான யுத்தமல்லடா