குருதி சொரிந்து கடலின் உடலும் சிவந்து போனதே
குயில்கள் பர்டும் இராகம் யாவும் சோகமானதே
எரியும் தீயில் கரிய புலிகள் உருகிப் போனதேன்
எமது தலைவன் விழியில் அருவி சொரியலானதேன்
தங்கை நளாயினி போனாள் -எங்கள்
தம்பிகள் வாமனும் இலக்மனும் போனார்
மங்கையும் கூடவே போனாள் - இந்து
மாகடல் மீதினில் தீயெனவானாள்.
கடலின்அரசன் சிதறும்வகையில் வெடிகள் சுமந்து போனீர்
கரையில்இருந்த உறவுகலைய சிறகு விரித்துப் போனீர்
படங்களாகி சுவர்கள் யாவும் உயர்ந்து சிரிக்கும் வீரரே
பகைவன் ஏறும் பெரிய கலத்தை எரித்து முடித்த தீரரே
அலைகள்அசையும் வகையில்பகையை முடித்த வீரப்பெண்களே
மகளிர்படையின் வலிமைஉலகில் தெரிய விழித்த கண்களே
அலைகள் மீதில் உலவும் பகையை அடித்த கரிய வேங்கைகள்
அவர்கள்தலைவன் ஒருவன்தலையைப் பிடித்து வந்த தங்கைகள்
உலகமெங்கும் திரியும் காற்றில் உமது மூச்சும் கலந்திடும்
உரிமைகேட்டு நிமிரும்போதில் உமது தீரம் விளங்கிடும்
தலைவன்காட்டும் வழியில்புலிகள் பகையை வென்று திரும்பிடும்
தமிழர்தேசம் உமதுபெயரை தினமும் பாடி வணங்கிடும்