காந்தரூபன் வாழுகின்ற கடலிது | Eelam Songs Lyrics

 காந்தரூபன் வாழுகின்ற கடலிது

கொலின்ஸ் கால்பதித்து நடைபயின்ற நிலம் இது

நீந்தி வினோத் ஆடிநின்ற அலையிது

ஜெயந்தன் சிதம்பரத்தின் உயிர்களுக்கு

விலையேது விலையேது

புதிய வரலாறு எழுதும் புலிவீரர்

புகழை உலகெங்கும் கூவு -அவர்

உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கி

உரத்த குரலெடுத்து பாடு பாடு பாடு

எதிரி வருவானா கரையைத் தொடுவானா

என்று புயலாகி நின்றோம் -புலி

அதிரும் வெடியோடு கடலில் நடைபோடும்

அணியில் துணையாகி வென்றோம்

உலகத் திசையாவும் தமிழன் அரசாளும்

நிலைமை வருமிங்கு ஒருநாள் -கடல்

புலிகள் படைசென்று பகைவர் படைவென்று

புலரும் தினமன்று திருநாள்

கடலின் கரையோரம் தலைவன் உருவாகி

கால்கள் நடைபோட வந்தான் -பெரும்

தடைகள் எதுவந்த போதும் அவன்காலில்

உடையும் எனச்சொல்லி வென்றான்

பூவும் புயலாகி பாயும் புலியாகி

போரில் குதித்துள்ள நாடு -தமிழ்

ஈழம் உருவாகும் வேளை இதுவாகும்

என்று களம்நோக்கி ஓடு