வீரத்தின் விளைநிலம்மே விடுதலையின் பிறப்பிடம்மே காலம் இட்ட கோலமதில் கரைந்தது இன்று உனது உயிரே

தாய் என்ற சொல்லுக்கே தாயே நீ தானே தமிழர்களின் என்னமதில் நிறைந்து இருப்பாய் நீயே

விடுதலையை காண்பதற்காய் வீறு கொண்டு எழுந்தவரை முத்தம்மிட்டு களம் அனுப்பி முதல் தாயாய் ஆகி விட்டாய் காணகத்தில் நிலைத்து இருந்து களம் கண்ட உன் செய்கையை தொலைவில் இருந்து வாழ்த்துகையில் தலை சிறந்த தாயானாய்
முற்றுகைக்குள் நீயும் வாழ்ந்து வலிகளை உந்தன் உடல் சுமந்தாய் வெற்று உடலாய் சாயும் போதும் மலர்களை போல புன்னகைத்தாய் சஞ்சலங்கள் கொண்ட வாழ்வில் சற்றும் நீயோ சளைத்ததில்லை சாத்திரங்கள் ஓதும் பெண்மை போல நீயும் வாழ்ந்ததில்லை
தாய் என்ற சொல்லுக்கே தாயே நீ தானே தமிழர்களின் என்னமதில் நிறைந்து இருப்பாய் நீயே
உற்றவர்கள் தொலைவில்லிருந்து உனது உள்ளம் நினைத்து இருக்கும் பெற்றவரை காண்பதற்காய் உன் விழிகள் தவித்து இருக்கும் பெரும்தலைவன் உன் மகனை நாக்குலரி அழைத்து இருக்கும் நீ வளத்த வீரருக்காய் உன் விழிகள் சொரிந்து இருக்கும்
வார்த்தை போதவில்லை இங்கு உந்தன் வாழ்வை எழுதிடவே வாய்க் அரிசி இடவும் கைகள் நீளும் தூரம் நீயிஇல்லையே போதுமடி தாயே போய்வா பொழுதும் துயரம் உனக்கு எதற்கு ஆளும் ஒரு காலம் தோன்றும் அங்கே உனக்கும் சிறப்பு இருக்கு
போதுமடி தாயே போய்வா பொழுதும் துயரம் உனக்கு எதற்கு ஆளும் ஒரு காலம் தோன்றும் அங்கே உனக்கும் சிறப்பு இருக்கு