கல்லறைப் பாட்டு காதினில் கேட்டு தேசம்விழிக்கிறதே அந்த மெல்லிய காற்று மேனியில் மோத உணர்வுகள் சிலிக்கிறதே
கார்த்திகைதீபங்கள் ஏற்றிடும் நேரம் கண்கள் கசிகிறதே எங்கள் காவிய வீரரை போற்றிடும் நேரம் கனவாய் எழுகிறதே

கார்த்திகை மழையில் காவிய களையில் வீரர்களோடு நனைகிறோம் கல்லறை போற்றி நெய் விளக்கு ஏற்றி உள்ளம் உருக வணங்கிகிறோம் ஒரு தரம் நீங்கள் எழவேண்டும் உங்கள் வீரத்தின் ஓர்மத்தை தர வேண்டும் உயிர் பெரும் உங்கள் மனம் வேண்டும் எங்கள் குரல்மொழி கேட்டு வர வேண்டும்
வீரர் சாகலாம் வீரம்சாகுமா காவியம் எழுதிய தோழர்களே என்றும் வாசம் மாறலாம் பாசம் மாறுமா துயிலும் இல்ல தோழியரே
கல்லறைப் பாட்டு காதினில் கேட்டு தேசம்விழிக்கிறதே அந்த மெல்லிய காற்று மேனியில் மோத உணர்வுகள் சிலிக்கிறதே
தாயக வாழ்வை சுமந்தவர் நெஞ்சை உயிரால் தழுவி அழுகிறோம் தமிழரின் மூச்சாய் வாழ்ந்தவர் உங்கள் நினைவில் கரைந்து தொழுகிறோம் சத்தியம் செய்திடும் கரம் வேண்டும் உங்கள் சாதனை வாழ்வின் வரம் வேண்டும் தலை கொடுத்து ஆடிய கொடை வேண்டும் மாவீரரின் சாவுக்கு விடை வேண்டும்
உயிர்கள் சாகலாம் உணர்வு சாகுமா உயிர் கொடுத்து ஆடிய தோழர்களே எங்கள் கண்கள் தூங்கலாம் கனவு தூங்குமா வீரத்தின் விதை குழி தோழியரே