கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்
பள்ளிக்கூடங்கள் அகதியானது
படிக்கும் பாடங்கள் அழுகையானது
அகதி முகாமில் அழுகின்ற விளக்கில் படிக்கிறோம்
அகதி முகாமில் அழுகின்ற விளக்கில் படிக்கிறோம்
ஆளுவோரின் கத்தி
கீறக்குருதி வரும் துடிக்கிறோம்
ஆளுவோரின் கத்தி
கீறக்குருதி வரும் துடிக்கிறோம்
கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்
கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்
குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன
உப்பு நீரினால் விழிகள் நனைந்தன
குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன
உப்பு நீரினால் விழிகள் நனைந்தன
வானத்தில் விளக்கு வருமென்று நினைத்து நடக்கிறோம்
வானத்தில் விளக்கு வருமென்று நினைத்து நடக்கிறோம்
வாசலில் வெடிக்கும் குண்டு
ஆசைகள் கருகும் துடிக்கிறோம்
வாசலில் வெடிக்கும் குண்டு
ஆசைகள் கருகும் துடிக்கிறோம்
கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்
கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்
திட்டமிட்டுப்பல சதிகள் தீட்டினர்
வெட்டி வீழ்த்திட வழிகள் காட்டினர்
திட்டமிட்டுப்பல சதிகள் தீட்டினர்
வெட்டி வீழ்த்திட வழிகள் காட்டினர்
கனவுகள் கிழிந்து தரையினில் கிடந்து துடிக்குதே
கனவுகள் கிழிந்து தரையினில் கிடந்து துடிக்குதே
எதிர்காலத்தின் கழுத்தை
பேரினவாதம் நெரிக்குதே
எதிர்காலத்தின் கழுத்தை
பேரினவாதம் நெரிக்குதே
கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்
கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்
புத்தகத் தாள்கள் எதிரில் விரிந்தன
செத்தவர் முகமே அருகில் தெரிந்தன
புத்தகத் தாள்கள் எதிரில் விரிந்தன
செத்தவர் முகமே அருகில் தெரிந்தன
போருக்கு படிப்பா படித்திட போற கேள்விகள்
போருக்கு படிப்பா படித்திட போற கேள்விகள்
பதில் ஊருக்கு தெரிந்தால்
இனியும் அணுகுமா தோல்விகள்
பதில் ஊருக்கு தெரிந்தால்
இனியும் அணுகுமா தோல்விகள்
கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்
கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

