வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது
வரும் வார்த்தைகளால் உம்மை தொழ முடியாது
தாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாது
எங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாது
வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது
[நேற்று வரை இங்கு பூத்திருந்தீர்
பெரும் நெருப்பெனப் போகவாக் காத்திருந்தீர்] (2)
போற்றியே பாடிட மொழிகளில்லை
கரும்புலிகளின் நினைவுகள் அழிவதில்லை
வாய்விட்டுப் பெயர் சொல்லி அழமுடியாது
[காற்றுடன் காற்றெனப் போனீர்கள்
அந்தக் கடலிலும் அலையென ஆனீர்கள்] (2)
வேற்றுடலோடு இங்கு வாருங்கள்
உங்கள் வேரினில் நீர் தெளித்தாடுங்கள்
வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது
[எதிரிக்கு நீங்களோ வெடிகுண்டு உம்மை இழந்த பின் இருக்கிறோம் இடியுண்டு] (2)
விதியினை மாற்றிய புலியென்று
இங்கு வீசிடும் காற்றிலும் பெயருண்டு
வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது
[இந்த மண் யாரிற்கும் பணியாது தமிழீழமண் எதிரிமுன் குனியாது] (2)
பொங்கிடும் உணர்வுகள் உறையாது கரும்புலிகளின் வேகங்கள் குறையாது
வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது
வரும் வார்த்தைகளால் உமைத் தொழமுடியாது
தாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாது
எங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாது
வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது