போரென்று படைகொண்டு எல்லைக்குள் | Eelam Song Lyrics

போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா  தமிழன்

புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா?

நீருண்டு நெல்லுண்டு நிறைவாக நம்நாட்டில் -நாங்கள்

நெருப்புண்டு கள்ளுண்டு நிற்போமா உன்கூட்டில்

தேனோடு பாலுண்டு பழமுண்டு பலவாகும்

தினையோடு பனைதெங்கும் இந்நாட்டின் வளமாகும்

மீனோடி முக்குண்டு முத்துண்டு மலைபோல

மிளிர்கின்ற புலிவீரர் திறமிங்கு உரமாக

தேசத்தின் தொழிலுண்டு வரியுண்டு நாம்வாழ -வேங்கை

செத்தாலும் விடுவானா ஈழத்ததை நீஆள

மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி

மண்மீட்க முன்வந்தார் பலவீரர் அணியாகி

மழலைதாம் சொல்கின்ற பிள்ளைகள் பலவாக -பிரபா

மடிமீது வளர்கின்றார் வரிகொண்ட புலியாக

தமிழீழம் மீளாமல் போரிங்கு ஓயாது

தமிழ்வாழும் தேசத்தில் தன்மானம் சாயாது