நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா
இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா
தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம் உந்தன்
தாய்நிலத்தில் உனக்கு ஒரு பந்தமில்லையாம் அழுவதன்றி உனக்கு
வேறு மொழியுமில்லையாம் இன்னும் அடங்கிப் போதல் அன்றி எந்த வழியுமில்லையாம்
அகதி யாகியே தெருவினோரமாய் திரிவதேனடா
அடிமைமாடுகள் போல இன்று நீ அலைவதேனடா
இன்னும் விழிகள் மூடி அமைதியாகப் படுப்பதேனடா
அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா
அப்புகாமியை ஆளயிங்க்கு விட்டதாரடா
இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா
இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா
புதிய வாழ்வதை எழுத நீயுமே களத்திலாடடா
புலிகள் சேனையோ டெழுந்து நின்றுமே தடைகள் மீறடா
தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா