எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்

எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி உங்களை வந்து நனைக்கும்

இது தாயின் உயிர் மீது செய்கின்ற சத்தியம்

தமிழீழம் உன்னலே காண்பது நிட்சயம்

பனைமரக்காடு அதை மறந்தோமா

பறவைகள் பேச்சு அதை மறந்தோமா

பசுக்களின் நீச்சல் அதை மறந்தோமா

பதுங்கிய குழிகள் அதை மறந்தோமா

எதை மறந்தோம் அண்ணா உங்களை மறக்க

நீங்கள் எதை கேட்டாலும் தருவோம் தருவோம்

தமிழ்மானம் திறக்க

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்

எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி உங்களை வந்து நனைக்கும்

வல்வை படுகொலை அதை மறந்தோமா

செம்மணி புதைகுழி அதை மறந்தோமா

கொக்கட்டிசோலை அதை மறந்தோமா

யாழ் இடப்பெயர்வு அதை மறந்தோமா

எதை மறந்தோம் அண்ணா உங்களை மறக்க

நீங்கள் எதை கேட்டாலும் தருவோம் தருவோம்

தமிழ்மானம் சிறக்க

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்

எங்களின் உழைப்பு சுடுகுழல் வழியே விடுதலைக்கா தெறிக்கும்

இது தாயின் உயிர் மீது செய்கின்ற சத்தியம்

தமிழீழம் உன்னலே காண்பது நிட்சயம்

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்

எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி உங்களை வந்து நனைக்கும்.

ம் ம் ம் ம்………… ஆ ஆ ஆ ஆ..