இன்னும் ஐந்துமணித்துளியில்

எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ்

ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும்

என்னை நீவாழத் தருகிறேன் -தமிழ்

ஈழத்தாயே போய்வருகிறேன்.

நேற்றுச் சிங்களவன் கொடிதாங்கினோம்

நெஞ்சில் அவன்கொடுத்த அடிவாங்கினோம்

மாற்று வழிகண்டு படைகூட்டினோம்

மானம் தமிழ்மண்ணில் நிலைநாட்டினோம்

இன்னும் நான்கு மணித்துளியில்

எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ்

ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும்.

எங்கள் கடலெல்லை யார்தாண்டுவார்

ஈழ மணிநாட்டை எவன்தீண்டுவான்

குண்டு தமிழ்நெஞ்சை யார்கொல்லுவான்

புலிகள் உயிர்மூச்சை எவன்வெல்லுவான்

இன்னும் மூன்று மணித்துளியில்

எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ்

ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும்.

கொலைஞர் ஆட்சிவிழ நான்தாக்குவேன்

கொடியர் படைவெறியர் உயிர்போக்குவேன்

தலைவர் ஆணைநான் நிறைவேற்றுவேன்

தமிழர் தாய்மண்ணைக் காப்பாற்றுவேன்

இன்னும் இரண்டு மணித்துளியில்

எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ்

ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும்.

இன்றுகளத்தில் நான் மடிதல்கூடும்

என்பின்னும் புலிகள் படைபோராடும்

வென்று தமிழீழம் வாகைசூடும்

விடுதலைக் கொடி காற்றிலாடும்

இன்னும் ஒரு மணித்துளியில்

எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ்

ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும்.

என்னை நீவாழ தருகிறேன் -தமிழ்

ஈழத்தாயே போய் வருகிறேன்.

#ltte mp3 songs #ltte songs #eelam songs #maaveerar songs #karthigai 27 #thayaka kanavudan #prabaharan songs #santhan songs #thenisai chellappa #maaveerar #தமிழீழ பாடல்கள் #தாயகப் பாடல்கள் #மாவீரர் பாடல்கள் #தமிழீழ எழுச்சிப் பாடல்கள் mp3 download #விடுதலை புலிகள் பாடல் mp3 download #கரும்புலிகள் பாடல்கள் mp3 #பிரபாகரன் பாடல் mp3 download #மாவீரர் பாடல்கள் mp3