இந்தமண் எங்களின் சொந்தமண்

இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்

இந்தமண் எங்களின் சொந்த மண்

இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்

நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு

நிம்மதி ஒன்றுதான் இல்லை

இந்தமண் எங்களின் சொந்தமண்

நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து

நின்றது போதும் தமிழா

உன் கலைகள் அழிந்து கவலை மிகுந்து

கண்டது போதும் தமிழா

வரிப்புலிகள் எழுந்து புயலைக்கடந்து

போர்க்களம் ஆடுது தமிழா

இன்னும் உயிரை நினைந்து உடலைச்சுமந்து

ஓடவா போகிறாய் தமிழா

இந்தமண் எங்களின் சொந்தமண்

இந்தமண் எங்களின் சொந்த மண்

இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்

நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு

நிம்மதி ஒன்றுதான் இல்லை

எனினும் இந்தமண் எங்களின் சொந்தமண்

சாவா இலையொரு வாழ்வா எனப்பெரும்

சமரே எழுந்தது தமிழா

உடன் வா வா புலியுடன் சேர் சேர் எனும் குரல்

வரையைப் பிளக்குது தமிழா

நீ ஆகா அழைத்திது

போ போ எனவொரு மகவை அனுப்பிடு தமிழா

நீ பூவா இலைப்பெரும் புயலாய் எழுந்துமே

புறப்பட்டு வந்திடு தமிழா

இந்தமண் எங்களின் சொந்தமண்

இந்தமண் எங்களின் சொந்த மண்

இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்

நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு

நிம்மதி ஒன்றுதான் இல்லை

எனினும் இந்தமண் எங்களின் சொந்தமண்

#ltte mp3 songs #ltte songs #eelam songs #maaveerar songs #karthigai 27 #thayaka kanavudan #prabaharan songs #santhan songs #thenisai chellappa #maaveerar #தமிழீழ பாடல்கள் #தாயகப் பாடல்கள் #மாவீரர் பாடல்கள் #தமிழீழ எழுச்சிப் பாடல்கள் mp3 download #விடுதலை புலிகள் பாடல் mp3 download #கரும்புலிகள் பாடல்கள் mp3 #பிரபாகரன் பாடல் mp3 download #மாவீரர் பாடல்கள் mp3