எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் | Eelam Song Lyrics

 எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌ எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌

க‌ல்ல‌றையே க‌த‌வு திற‌ எங்க‌ள் க‌ண்ம‌ணிக‌ள் உயிர்த்து எழ‌

எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌

போழ் ஊட்டி வ‌ள‌த்த‌ அன்னை ப‌ர‌ரை ந‌ஞ்சை குடித்த‌வ‌ர்க‌ள் தாய் நாட்டின் உயிர் காக்க‌ த‌ம் உயிரை முடித்த‌வ‌ர்க‌ள் நாடெல்லாம் எங்கும் அவ‌ர் ந‌ட‌ந்த‌ கால் த‌ட‌ம் இருக்கு ஒடோடி திரிந்த‌ அவ‌ர் உட‌ல் இல்லை ப‌ட‌ம் இருக்கு ந‌ல்ல‌ நாள் விடுத‌லை நாள் நாளை இங்கு பூக்க‌ வேண்டும் க‌ல்ல‌றையே க‌த‌வு திற‌ வீர‌ர் அதை பார்க்க‌ வேண்டும்

எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌

த‌மிழ‌ர் க‌ண்ணீர் துடைக்க‌ க‌ள‌ம் நோக்கி வ‌ந்தாரே இமை மூடி இன்ற‌வ‌ரே க‌ண்ணீரை த‌ந்தாரே உயிர் நீத்த‌ மாவீர‌ர் வ‌லிமை போல் உவ‌மை இல்லை துய‌ர் தாங்க‌ எங்க‌ளுக்கும் துளி கூட‌ வ‌லிமை இல்லை ந‌ல்ல‌ நாள் விடுத‌லை நாள் நாளை இங்கு பூக்க‌ வேண்டும் க‌ல்ல‌றையே க‌த‌வை திற‌ வீர‌ர் அதை பார்க்க‌ வேண்டும்

எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌ க‌ல்ல‌றையே க‌த‌வு திற‌ எங்க‌ள் க‌ண்ம‌ணிக‌ள் உயிர்த்து எழ‌ எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ