கண்ணிவெடி கனவில் வருது
காலை நினைக்க அழுகை வருது
ஐயோ அம்மே என்ன வாழ்க்கையோ
சண்டை போட கொட்டி வருது
சாவை நினைக்க பயம் வருது
மகே அம்மே என்ன வாழ்க்கையோ
திக்குமுக்கு ஆடுகிறது நம்ம புத்தி ஏனோ
திட்டம் எல்லாம் போடுறாங்க சண்டைக்குத்தானோ
பெறகெற போயி நாம நேந்ததும் ஏனோ
சிங்களத்து சிப்பாய் ஆன பாவம்தானோ...(கண்ணிவெடி..)
பெரியதுரை கொமாண்ட் பண்ண மூவ்பண்ணி போனது
கொட்டி வைச்ச ஜொனி வெடியில சில்வா காலு போனது
பொடி மல்லி கொட்டியெண்டு நமக்கெல்லாம் சொன்னது
ஐயோ பாவம் பண்டா கூட நொண்டி ஆகிப்போனது
தப்பிமண் அங்கும் இங்கும் நம்ம காலை எடுக்குது
தப்பினேன் பிடிக்க சொன்னா நமக்கு உள்ளே வெடிக்குது
கொட்டி இல்லா இடத்தில் எல்லாம் கண்ணிவெடி இருக்குது
பெட்டியில நம்மை எல்லாம் போடத்தானே துடிக்குது
எங்க காலை ஐயோ பார்க்க இப்ப
புத்தம் சரணம் கச்சாமி
எங்க வாழ்வை வந்து பார்க்க
அந்த சங்கம் சரணம் கச்சாமி.....(கண்ணிவெடி..)
"ஏ.. பண்டா மே அப்பே பெளத்த பூமியாய்
இங்கு தமிழன் எண்டு யாரும் இருக்க கூடாது
ஒக்கம அழிக்க வேண்டும். மூவ்"
தெமிழை கொல்லு எண்டு சொல்லி
அவங்க மப்பை கொடுக்கிறாங்க
வாங்கிக் கொண்டு இங்க வந்தா
இவங்க வெடியை முடிக்கிறங்க
மண்ணை தொட்டா வெடிக்கிறாங்க
மரத்தை தொட்டா வெடிக்கிறாங்க
கண்ட நிண்ட இடத்தில் எல்லாம்
நம்ம ஆக்கள் முடியிறாங்க
சண்டையில கண்ணிவெடி இல்லாட்டி மிச்சம் நல்லம்
சண்டைக்கு இப்ப போறதெண்டா எனக்குகூட ரொம்பப்பயம்
பொன்னம்மான் கண்ணிவெடி குறுப் ஒன்று இருக்குதாம்
பொம்பளை கொட்டிதானே நம்ம காலை எடுக்குதாம்.
எங்க காலை ஐயோ பார்க்க இப்ப
புத்தம் சரணம் கச்சாமி
எங்க வாழ்வை வந்து பார்க்க
அந்த சங்கம் சரணம் கச்சாமி.....(கண்ணிவெடி..)