அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை
அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
அன்று முற்றத்தில் அழித்து அழித்து நான்
ஆனா எழுதிய மண்ணல்லவா
இன்று நான் பாடும் பாட்டும் என் தாய்மண் என்னுள்
இசைக்கின்ற பண்ணல்லவா
அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
எங்கு வாழ்ந்தாலும் எனது தமிழ் நெஞ்சம்
இயங்கும் என் தாயின் எண்ணத்திலே
அங்கு தமிழினம் துடிக்கும் பொழுதெல்லாம்
ஆறு பாயுமென் கன்னத்திலே
அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
எதிரி எங்கள் தாய் மண்ணை அழித்ததாய்
இரவு பகல் நூறு கதை கட்டுவான்
அதிரும் புலிகளின் குண்டு வெடியோசை
அறிந்து தமிழ்பிள்ளை கை தட்டுவான்
அழகான அந்த பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
பகைவர் பாயலாம் உடல்கள் சாயலாம்
எனினும் தமிழ் ஈழம் பணியாது
அகமும் புறமுமாய் உயிரில் கலந்த என்
அன்னை மண் பாசம் தணியாது
அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை
அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்