புதிய பதிவுகள்

6/recent/ticker-posts

போராட்டத்தை மறக்க வேண்டும் வாயை திறந்து சிக்கலில் மாட்டினார் ஜெயராஜ்

பொது மேடை ஒன்றில் பேசிய கம்பன் கழக நிறுவுனர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் தமிழ் மக்கள் கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மறக்க வேண்டும் என்று பேசியது தமிழ் மக்களிடையே மாபெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. 

குறித்த கருத்தை பொது மேடையில் தெரிவித்த கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் இந்த கருத்திற்கு பின் தனக்கு பாரிய எதிர்ப்புக்கள் உருவாகும் என்பதையும் மிகவும் துல்லியமாக கணித்திருந்தார். 

அவர் கணித்தது போலவே இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் கம்பவாரிதியின் குறித்த சர்ச்சை பேச்சிற்கு பலத்த கண்டணங்களை தெரிவித்து வருவதுடன் சமூக வலைத்தளங்களில் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். 

கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தனது மேடைப் பேச்சுக்களில்  தமிழர்களின் முப்பாட்டன் இராவணனை கொடிய அரக்கனாக சித்தரித்து தொடர்ந்து கருத்துரைத்து வரும் ஒரு பேச்சாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் ஒரு வாழை இலை மீது வேட்டியை உயர்த்தியபடி நிற்க சில பெண்கள் அவருடைய காலுக்கு தீபம் காட்டி பூஜை செய்வது போல் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி அது மிகப்பெரும் சர்க்சையை ஏற்ப்படுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.