13.11.2026 இரவு 10.00 மணி - கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு தொடர்பான மீள்விழிப்பூட்டலும் முன்னெச்சரிக்கையும்!
அதிக ஈரப்பதன் மிக்க கீழைக் காற்றுகளின் வீசுகை காரணமாக நாடு முழுவதும் பரவலாக பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 18.11.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக நாளையும் (11.11.2026), நாளை மறுதினம் (12.11.2026), எதிர்வரும் 13.11.2026 வரையும் பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, கம்பஹா, குருநாகல் மாவட்டங்கள் கனமழை முதல் மிகக் கனமழை பெறும் வாய்ப்புள்ளன.
ஏற்கனவே கனமழை பெற்று நிலம் நிரம்பி சில இடங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் கனமழை கிடைக்கும் என்பதனால் வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புக்கள் அதிகம். வெள்ளப்பெருக்கு மற்றும் இடி மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருங்கள்!
கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி மாவட்டங்களில் மண் முழு ஈரப்பதனைக் கொண்டுள்ளது. தொடர்ந்தும் மழை கிடைக்கும் என்பதால் நிலச்சரிவு அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மிக மிக அவதானமாக இருங்கள்!
கிழக்கு, வடமத்திய, வட மேற்கு மாகாணங்களுக்கும் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும். இம்மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்த வாய்ப்புக்கள் உள்ளன.
13.11.2026 புதிய தாழமுக்கம் உருவாகிறது!
எதிர்வரும் 13.11.2026 அன்று அதிகாலை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது ஆரம்பத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து பின்னர் வடக்கு நோக்கி நகரும் வாய்ப்புள்ளது.
இதனால் 14ம் திகதி முதல் 18ம் திகதி வரை வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, சப்ரகமுவா, தெற்கு, வட மத்திய, ஊவா மாகாணங்களில் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அம்பாந்தோட்டை, நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, கம்பஹா, குருநாகல் மாவட்டங்கள் அதி கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளன. மீளவும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இந்த தாழமுக்கம் காரணமாக 16 மற்றும் 17ம் திகதிகளில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35-50 கி.மீ. வேகத்திலும் கடற்பகுதிகளில் மணிக்கு 40-65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
வானிலை நிகழ்வுகளை நாம் தடுக்க முடியாது. ஆனால் எங்கள் விழிப்புணர்வு
மற்றும் தயார்ப்படுத்தல்
மூலம் அவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கவும் குறைக்கவும் முடியும்.
இந்த முன்னறிவிப்பின் அடிப்படையில் நீங்கள் தயாராக இருந்து, அனர்த்தம் நிகழாது விட்டாலும் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தயாராக இல்லாமல் இருந்து ஏதாவது ஒரு அனர்த்தம் நிகழ்ந்தால் அதன் பாதிப்புக்கள் அதிகம்.

