2027 வரவு செலவுத் திட்டம் - அரச ஊழியர் சம்பள மற்றும் கொடுப்பனவு உயர்வுகள் பற்றிய விளக்கம்
அடிப்படைச் சம்பளம் - 2025 இல் தொடங்கிய சம்பள உயர்வின் 3வது மற்றும் இறுதிச் சுற்று 2027 இல் அமுல் (ரூ. 110 பில்லியன் ஒதுக்கீடு).
மருத்துவர்கள் (DAT கொடுப்பனவு) - ரூ. 70,000 ➔ ரூ. 95,000 (ரூ. 25,000 உயர்வு).
சுகாதாரத் துறை - தாதியர்/துணை மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ. 12,000; ஏனையோருக்கு ரூ. 4,000 விசேட கொடுப்பனவு.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் - கல்விசார் கொடுப்பனவு மாதாந்தம் ரூ. 25,000 அதிகரிப்பு.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் - மாதாந்த உணவு மற்றும் தங்குமிடக் கொடுப்பனவு ரூ. 10,000 உயர்வு.
முப்படைகள் (2027 ஜூலை முதல்) - நாளாந்த உணவுப் கொடுப்பனவு உத்தியோகத்தர்களுக்கு ரூ. 315 இனாலும், ஏனையோருக்கு ரூ. 332 இனாலும் அதிகரிப்பு.
சிறைச்சாலைத் துறை (2027 ஜூலை முதல்) அதிகாரிகளின் இடர் கொடுப்பனவு - ரூ. 8,000 ➔ ரூ. 16,000 (100% உயர்வு). ஏனைய ஊழியர் கொடுப்பனவு: ரூ. 2,250 ➔ ரூ. 10,000.
கிராம சேவை உத்தியோகத்தர்கள் - பிரயாணக் கொடுப்பனவு: ரூ. 1,600 ➔ ரூ. 4,000.
அலுவலக வாடகை: நகர சபை ரூ. 3,000 ➔ ரூ. 6,000 - பிரதேச சபை ரூ. 2,000 ➔ ரூ. 4,000. மின்சார வாகனக் கொடுப்பனவு - தகுதியுள்ள அதிகாரிகள் தனிப்பட்ட மின்சார வாகனம் பயன்படுத்தினால் மாதாந்தக் கொடுப்பனவு 150% உயர்வு (2027 ஜூலை முதல்)

