புதிய பதிவுகள்

6/recent/ticker-posts

வரவு - செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி

இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2027ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி

2027ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க இன்று  பிற்பகல் 1.30 மணியளவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமாக இது அமையவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முக்கிய நிதி முன்மொழிவுகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார எதிர்காலம், மக்களின் வாழ்க்கைச் செலவு, அரச ஊழியர்களின் சம்பளம், வரி விதிப்புகள் மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.